திரு.எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுஅவர்கள் நினைவு தினம்!.
Mr Ernest Rutherford Memorial Day
'அணுக்கரு இயற்பியலின் தந்தை'திரு.எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுஅவர்கள் நினைவு தினம்!.
நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி நியூசிலாந்தில் பிறந்தார்.
இவர் யுரேனிய கதிர்வீச்சில் எக்ஸ் கதிர் இல்லாமல் 2 வித்தியாசமான கதிர்கள் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு ஆல்பா, பீட்டா கதிர்கள் என பெயரிட்டார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். இவர் மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உட்பட பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.
இவர் வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை குறித்து தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். கதிரியக்கத்தின் மிக முக்கிய அம்சமான எரியாற்றல் குறித்தும் ஆராய்ந்தார். இது, வேதியியல் வினைகளில் இருந்து வெளிப்படும் ஆற்றலைவிட அதிகம் என்று நிரூபித்தார். இதன்மூலம் அணு ஆற்றல் என்ற முக்கியக் கோட்பாட்டை உருவாக்கினார்.
கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு 1908-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு 1914-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.
அணுக்கரு பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் தான் அணுக் கட்டமைப்பு குறித்த இன்றைய கோட்பாடுகள் அனைத்துக்கும் அடித்தளமாக விளங்குகின்றன. அணுக்கரு இயற்பியலின் தந்தை என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு தனது 66-வது வயதில் 1937 அக்டோபர் 19 ஆம் தேதி அன்று மறைந்தார்.

நாமக்கல் கவிஞர் திரு.வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம்!.
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது""தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா"
போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர் திரு.வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம்!.
வெ.இராமலிங்கம் பிள்ளை(அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.
English Summary
Mr Ernest Rutherford Memorial Day