எஸ்.ஐ.ஆர் விசாரணை; தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகிய இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி..!
Indian cricketer Mohammed Shami appeared before election officials for an SIR inquiry
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மேற்கு வங்கத்தில், நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட போதிலும், விவரங்கள் போதுமானதாக இல்லை என ஒரு கோடி பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர்.படிவத்தை அவர் சரியாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், உரிய ஆவணங்களுடன் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஷமி, கிரிக்கெட்டுக்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறியவர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற எஸ்ஐஆர் விசாரணைக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று ஆஜராகியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் நடைமுறையின் கீழ் திட்டமிடப்பட்ட விசாரணைக்காக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று கொல்கத்தாவில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகியுள்ளார்.
தெற்கு கொல்கத்தாவின் பிக்ரம்கர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஷமி தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகியுள்ளார்.
English Summary
Indian cricketer Mohammed Shami appeared before election officials for an SIR inquiry