விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி! நெல் முளைத்து வீணானது, விவசாயிகள் அழுகின்றனர்...! – எடப்பாடி பழனிசாமி சாடல்
tearful Diwali farmers Paddy sprouts but wasted farmers crying Edappadi Palaniswami Sadal
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அரசின் நிர்வாகக் குளறுபடியால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், தீபாவளி மகிழ்ச்சியின் நேரத்தில், தமிழக விவசாயிகள் கண்ணீர் தீபாவளி கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“மழையில் நெல்மணிகள் முளைத்து வீணாகி வருகின்றன. நெல் கொள்முதலில் திமுக அரசின் சோம்பேறித்தனமும், சாக்குப் பைகள் மற்றும் தார்ப்பாய்களின் பற்றாக்குறையும் விவசாயிகளை சாலையில் குவிக்க வைத்துள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.அவரது கூற்றில், “அஇஅதிமுக ஆட்சியில் தினமும் 1,000 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் ஆட்சியில் 600 மூட்டைகள் மட்டுமே வாங்கப்படுகிறது.
இது விவசாயிகளின் உழைப்பை மதிக்காத செயல்,” என்றும் விமர்சித்தார்.பருவமழைக்கு முன் கொள்முதல் செய்யாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் வீணாகி விட்டதாகவும், விவசாயிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.“மழையில் நனைந்த நெல்மணிகளை காப்பாற்ற தார்ப்பாய் கூட வழங்காத திமுக அரசு விவசாய விரோத ஆட்சி. இந்த அலட்சியம் தொடர்ந்தால், மாபெரும் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும்,” என்று எச்சரித்துள்ளார்.
English Summary
tearful Diwali farmers Paddy sprouts but wasted farmers crying Edappadi Palaniswami Sadal