வங்க மொழி பேசும் நபரையும் வங்கதேசத்தை சேர்ந்தவர் என அறிவிக்க உரிமை இல்லை; மம்தா பானர்ஜி..!
Mamata Banerjee says she has no right to declare a person who speaks Bengali as a Bangladeshi
வங்க மொழி பேசும் எந்த நபரையும் வங்கதேசத்தை சேர்ந்தவர் என அறிவிக்க உரிமை இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் மால்டா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டம் ஒன்றில் மம்தா கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது:
எஸ்ஐஆர் பணிகள் ஏன் அவசரமாக தொடங்கப்பட்டது..? என்றும், பிப்ரவரியில் தேர்தல் வருவதை பாஜவினர் அறிந்து வைத்துள்ளனர். எனவே மிகவும், புத்திசாலித்தனமாக உள்துறை அமைச்சகம் இந்த பணிகளை திட்டமிட்ட்டுள்ளதாகவும், பாஜவால் மேற்கு வங்கத்தில் வெல்ல முடியாது என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அங்கு பேசுகையில், மால்டா மக்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும், நீங்கள் யாரும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டீர்கள். உங்கள் காவலனான நான் இங்கு இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆவணங்கள் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் டிசம்பர் 12 முதல் அனைத்து தொகுதிகளிலும் முகாம்களை தொடங்குங்கள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு எந்த நிதியையும் தருவது இல்லை என்றும், கடிதங்கள் எழுதிய போது அதற்கு பதில் இல்லை எனவும், இங்கு எமர்ஜென்சி போன்ற ஒரு சூழலை உருவாக்க விரும்பினால் மக்கள், அதற்கு தக்க பதில் தருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எஸ்ஐஆர் பணிகள் மூலம் நீங்களே உங்களுக்கு குழியை தோண்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றும், பீஹாரில் நீங்கள் வென்றிருக்கலாம், ஆனால் மேற்கு வங்கத்தில் அது முடியாது. மக்களின் ஆதரவை உங்களால் பெற முடியாது என்றும், முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Mamata Banerjee says she has no right to declare a person who speaks Bengali as a Bangladeshi