தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்! டக்குனு சொல்லுங்க..’பனையூர்’ ரெடியா இருக்கு!ஓபிஎஸ் போட்ட கணக்கு! கண்டுக்காத பாஜக-அதிமுக! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அரசியல் ரீதியாக கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், பாஜக கூட்டணியிலும் அவருக்கு உரிய இடம் வழங்கப்படாத சூழலில், அடுத்து என்ன செய்வது என்ற தெளிவற்ற நிலை ஓபிஎஸ்ஸை கவலைக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெயரை முன்னிறுத்தி ஒரு “பூச்சாண்டி அரசியல்” நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய் கூட்டணிக்கு அழைக்கிறார் என்ற தகவலை திட்டமிட்டு கசியவிட்டு, அதன் மூலம் டெல்லி பாஜக தலைமையின் கவனத்தை ஈர்க்கவும், அதிமுகவில் மீண்டும் இடம் பெற எடப்பாடி பழனிசாமி மீது அழுத்தம் கொடுக்கவும் ஓபிஎஸ் தரப்பு முயற்சி செய்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாவது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விஜய் தலைமையிலான தவெக வேகமாக வளர்ந்து வருகிறது என்ற தகவலை முன்வைத்து, “அந்தப் பக்கம் சென்றால் 10 முதல் 12 தொகுதிகள் கிடைக்கும்” என்ற கணக்கை பாஜக தலைமையகமான கமலாலயம் வரை கொண்டு செல்கிறார்களாம். இதன் மூலம், ஓபிஎஸ்ஸை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக டெல்லியை நம்ப வைப்பதே இந்த யுக்தியின் நோக்கம் என கூறப்படுகிறது.

மேலும், டெல்லி தரப்பில் ஓபிஎஸ்ஸை நேரடியாக என்டிஏவில் சேர்க்காமல், ஒரு தனிக் கட்சி வடிவில் கொண்டு வரலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் ரஞ்சித் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள ‘எம்.ஜி.ஆர் அ.தி.மு.க’ என்ற கட்சியை பயன்படுத்தி, அதில் ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி, பின்னர் கூட்டணிக்குள் இணைப்பது குறித்த பேச்சுகளும் நடந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் களத்தில் நிலவும் அரசியல் யதார்த்தம் வேறு விதமாக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய்யை ஒரு அரசியல் “மிரட்டல் கருவி”யாக பயன்படுத்துபவர்கள், உண்மையில் அவரது தலைமையை ஏற்கத் தயாராக இல்லை என்பதே வெளிப்படையான உண்மை. விஜய் பெயரை முன்வைத்து டெல்லியை அச்சுறுத்தி, தங்களுக்கான அரசியல் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முயல்வதே இந்த நாடகத்தின் மையம் என்கிறார்கள்.

இதுவரை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பேசிய கூட்டணி கட்சி தலைவர் என்றால், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், தவெகவுடன் பெரிய கட்சிகள் கூட்டணி பேசுகின்றன என்ற தகவல்களுக்கு திடமான ஆதாரங்கள் இல்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மொத்தத்தில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தற்போதைய அரசியல் நகர்வு யூகங்கள், கசியவிடப்படும் தகவல்கள் மற்றும் பூச்சாண்டி அரசியல் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாகவே தெரிகிறது. விஜய்யை முன்னிறுத்தி ஒரு பக்கம் டெல்லிக்கு அழுத்தம் கொடுப்பதும், மறுபக்கம் அதிமுகவிற்குள் மீண்டும் நுழைய முயல்வதும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. 2026 தேர்தல் நெருங்கும், இத்தகைய அரசியல் நாடகங்கள் இன்னும் அதிகரிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். இறுதியில் யார் யாருடன் கை கோர்ப்பார்கள் என்பதை காலமே தீர்மானிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS left alone Tell them to hide Panaiyur is ready OPS calculation BJP AIADMK not aware


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->