திருப்பரங்குன்றம் விவகாரம்: 'வழிபாட்டு முறைகளை தடுத்து நிறுத்துவதன் மூலம் திமுக அரசின் திருப்திபடுத்தும் அரசியல் அம்பலப்பட்டுள்ளது'; அண்ணாமலை காட்டம்..!
Annamalai condemned the DMK governments appeasement politics in the Thiruparankundram issue saying it has been exposed
100 ஆண்டுக்கால மரபுப்படி வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே கார்த்திகை மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு கொடுத்துள்ள நிலையிலும் அங்கு தீபம் ஏறவில்லை. அத்துடன், சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்புடன் மனுதாரர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அதற்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதனால் திருப்பரங்குன்றத்தில் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றநிலையில், அவர்களை தடுத்த போலீசார் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பதில் 02 காவலர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ''திருப்பரங்குன்றத்துக்கு (டிசம்பர் 03 )நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்பி வழிபாட்டு முறைகளை தடுத்து நிறுத்துவதன் மூலம் திமுக அரசின் திருப்திபடுத்தும் அரசியல் அம்பலப்பட்டுள்ளது,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''திமுக அரசின் சனாதன தர்மத்தின் மீதான விரோதம் இனி விளக்கத்துக்குரிய விஷயமல்ல. அது ஒரு உண்மை. ஹிந்து பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஹிந்து சமய அறநிலையத்துறை, திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்தச் செயல் பக்தர்களின் நம்பிக்கையின் மையத்தையே தாக்குகிறது.
திருப்பரங்குன்றத்துக்கு இன்று நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்பி வழிபாட்டு முறைகளை தடுத்து நிறுத்துவதன் மூலம் திமுக அரசு, அதன் திருப்திபடுத்தும் அரசியலின் முழு அளவையும் அம்பலப்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் ஏன் மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு திமுக பதிலளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் இந்த அரசுக்கு ஒரு பொருட்டு இல்லையா..?''அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
English Summary
Annamalai condemned the DMK governments appeasement politics in the Thiruparankundram issue saying it has been exposed