அமலாக்கத்துறை ரோடில் சிக்கிய தங்க கட்டிகள்! கட்டுக்கட்டாக கோடி கணக்கில் பணம்!
ED Raid Karnataka Cogress MLA house
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் (59) மீது சட்டவிரோத கனிம ஏற்றுமதி தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.38 கோடி மதிப்பிலான கனிம வளங்களை அவர் சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு தற்போது பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை (ED) சதீஷ் கிருஷ்ணா சைல் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சொத்துகளை குறிவைத்து 15 இடங்களில் இரு நாட்கள் நீடித்த சோதனைகளை மேற்கொண்டது.
அதில், ரூ.1.68 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்கம், 268 கிலோ வெள்ளி உள்ளிட்ட பெருமளவிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.14.13 கோடி முடக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரங்க மோசடியில் தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து மேலும் ஆழமான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ED Raid Karnataka Cogress MLA house