உக்ரைனில் அமைதி வரும் என நம்புகிறேன்: புதின் பேச்சு!
I believe peace will come in Ukraine Putins speech
நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் ,பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்என புதின் கூறினார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தை அமெரிக்காவி உள்ள ராணுவ படை தளத்தில் நடைபெற்றது . இதில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது 3 மணிநேரத்திற்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது புதின் கூறும்போது, எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என கூறினார்.
மேலும் டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், போர் தொடங்கியிருக்காது என கூறிய அவர் எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன் என பேசினார்.
மேலும் உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு நான் உடன்படுகிறேன் என்றார். அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என்றும் புதின் கூறினார்.
இதையடுத்து டிரம்ப் கூறும்போது, நாங்கள் மிக ஆக்கப்பூர்வ கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளோம். விரைவில் நேட்டோவை அழைத்து பேசுவேன். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் அழைத்து இன்று நடந்த சந்திப்பு பற்றி அவரிடம் பேசுவேன் என்று கூறினார்.
அதிபர் புதின், அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவர்கள் விரும்பினால் நானும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று டிரம்ப் கூறினார். 2-வது கூட்டம் அதிக ஆக்கப்பூர்வ ஒன்றாக இருக்கும் என்றும் கூறினார். .
English Summary
I believe peace will come in Ukraine Putins speech