தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க ஆண்டு விழா..ஏழைகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின்  17 ஆம் ஆண்டு விழாவில் ஏழை எளிய  மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், என ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின்  17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் க.குமார் அவர்கள் தலைமையில், சென்னை,சர்.பி.டி தியாகராய அரங்கில் (3-7-2025) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் எழுச்சி தமிழர் முனைவர் மாண்புமிகு தொல்.திருமாவளவன் M.P.அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர், வாழும் ஆழ்வார் மாண்புமிகு எஸ் .ஜெகத்ரட்சகன் M.P அவர்களும்,பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் டாக்டர் பி .ஆனந்த் அவர்களும், விருகை வி.என். கண்ணன் அவர்களும், உயர்திரு. மணிமாறன் இயக்குனர்  கனரா பேங்க் அவர்களும், வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னியரசு அவர்கள், ஆம்ஸ்ட்ராங் சகோதரர்  மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

இந்த பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் நடைபெறுவது போல் மூத்த பத்திரிகையாளர்களுக்கு பொற்கிழி, ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி  மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் மற்றும் இருசக்கர சைக்கிள், ஏழை வெளியே மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், என ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 நமது சங்கத்தின் சார்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் வி.சி.க தலைவர் தொல்.திருமா அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது .இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன் வரவேற்கிறேன் என்று கூறினார் பின்பு கூட்டத்தில் அரசு அடையாள அட்டை வழங்குவதை குறித்து தமிழக முதல்வர் அவர்களிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பேன் என்று உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The annual celebration of the Secretariat Journalists AssociationCelebrating by providing welfare scheme assistance to the poor


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->