ஆசிரியரை  மாணவன் செய்த செயல் .. அதிர்ந்த போலீசார்! - Seithipunal
Seithipunal


ஆசிரியர் தன்னை அடித்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியால் ஆசிரியரை சுட்டதாக மாணவன் ஒருவன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். 

உத்தரகாண்ட் மாநிலம் காசிபூர் நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ககன்சிங் என்ற  ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு ஒரு வகுப்பில் பாடம் நடத்திய ககன்சிங், அங்கு படித்த 9-ம் வகுப்பு மாணவனின் கன்னத்தில் அறைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன், டிபன் பாக்சில் பழிவாங்க திட்டமிட்டுள்ளான்.அதன்படி சம்பவத்தன்று துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்த அந்த மாணவன் பாடம் நடத்திக்கொண்டிருந்த ககன்சிங்கின் முதுகில் சுட்டார். 

இதில் படுகாயம் அடைந்த நிலைகுலைந்து உயிருக்கு போராடிய ஆசிரியரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபரேசன் செய்து தோட்டாவை அகற்றிய பின்னர் தற்போது அவர் நலமாக இருப்பதாக தெரிகிறது.

அதனை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிய மாணவனை பின்னர் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, ஆசிரியர் தன்னை அடித்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் சுட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The action of the student towards the teacher shocked the police


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->