இனி இந்த உடையில் தான் வர வேண்டும்: தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடைக் கட்டுப்பாடு!
Thanjavur Temple dress code
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிடக்கலைக்கும் சிற்ப கலைக்கும் சிறந்து விளங்குகிறது. தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கோவிலுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அணிந்து வரும் ஆடை ஒரு சிலருக்கு முகம் சுழிக்க வைக்கும் நிலையில் உள்ளது.
இதனால் இதனை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று முதல், கோவில் நுழைவாயில் மற்றும் காலனி பாதுகாக்கும் இடம் என 2 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்து வரலாம் எனவும் பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையை பார்த்த பலரும் இதனை வரவேற்றுள்ளனர்.
English Summary
Thanjavur Temple dress code