பேராசிரியரின் பொறுக்கித்தனம்... மாணவிகளுக்கு ஆபாச எம்.எம்.எஸ்.. தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலை., யில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியராக ஸ்ரீலால் பாண்டியன் என்பவன் பணியாற்றி வருகிறான். இவன் மீது அங்குள்ள பிலோமினா நகர் பகுதியில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரர், வல்லம் டி.எஸ்.பியிடம் கடந்த மாதம் 28 ஆம் தேதி ஒரு புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில், தனது மகள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் பி.எஸ்.சி பயின்று வரும் நிலையில், அவரது அலைபேசி எண்ணிற்கு பேராசிரியர் ஸ்ரீலால் பாண்டியன் ஆபாச எம்.எம்.எஸ்களை அனுப்பி வருகிறார். 

மேலும், தனது மகள் மட்டுமின்றி, இது போல ஆறு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். பேராசிரியரின் பாலியல் தொல்லை தாளாமல் தனது மகள் மற்றும் அவரது தோழி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர். இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

இதனையடுத்து, இந்த புகாரின் பேரில் வல்லம் மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்ய உத்தரவிட்ட நிலையில், வல்லம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்று பெயரளவில் விசாரித்துவிட்டு, ஜனவரி மாதம் 4 ஆம் தேதி காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். 

இதன்படி, ஜனவரி 4 ஆம் தேதி இராணுவ வீரர் தனது மகளுடன் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், காலை முதல் மாலை வரை காத்திருக்க வைத்துவிட்டு இரவில் திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  

இந்த விஷயங்களை கவனித்து வந்த பல்கலைக்கழக நிர்வாகம், விருதுநகர் மாவட்டம் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் போல இது விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உணர்ந்து, ஸ்ரீலால் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur Periyar Maniammai Institute Lecturer Srilal Pandiyan Sexual Torture for girl Students


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->