பறக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போர் விமானம்: ஆய்வு செய்ய கேரளா வரும் பிரிட்டன் பொறியாளர்கள் குழு..!
A team of British engineers will arrive in Kerala today to inspect the British fighter jet parked in Thiruvananthapuram
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பழுதான நிலையில் மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பிரிட்டீஷ் கடற்படை போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தை இங்கேயே வைத்து பராமரிப்பு பணியை செய்வதா அல்லது பிரிட்டன் கொண்டு செல்வதா என முடிவு செய்வதற்காக அந்நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் குழு இன்று இந்தியா வரவுள்ளனர்.
பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ், அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 14-இல் புறப்பட்ட எப்35 பி போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பில் இருந்த போது திடீரென எரிபொருள் பற்றாக்குறை காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டது.

குறித்த போர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பினாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை. இதனால் ரூ.640 கோடி மதிப்புள்ள இந்த போர் விமானம் 03 வாரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா வரும் இங்கிலாந்து பொறியாளர்கள் குழு விமானத்தை பிரித்து கொண்டு செல்லலாமா என ஆலோசித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக பிரச்சினையை சரி செய்ய பிரிட்டிஷ் கடற்படை பொறியாளர்கள் முயன்றாலும் எதுவும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 25 பேர் கொண்டு பிரிட்டன் பொறியாளர்கள் நிபுணர்கள் குழு இன்று கேரளா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர். குறித்த விமானத்தை சரி செய்வதற்கான முயற்சிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை இந்தியா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
A team of British engineers will arrive in Kerala today to inspect the British fighter jet parked in Thiruvananthapuram