ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம்: MPL நிறுவனம் 60% ஊழியர்களை பணிநீக்கம்! அதிர்ச்சியில் MPL ஊழியர்கள்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு சமீபத்தில் சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் தீர்மானம் ஆன்லைன் கேமிங் துறையில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தின் காரணமாக, கிரிக்கெட் பெட்டிங் மற்றும் நிஜப் பண அடிப்படையிலான போட்டிகளை வழங்கி வந்த Drcam II மற்றும் MPL (மொபைல் பிரிமியர் லீக்) போன்ற பிரபலமான தளங்கள், தங்களின் பணம் வைத்து விளையாடும் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. Drcam II-க்கு உரிமையுள்ள Drcam Sports மற்றும் MPL இரண்டும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. MPL தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வரும்” என தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், வருவாய் இழப்பை சமாளிக்க, MPL இந்தியாவில் தனது ஊழியர்களில் 60% பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் வைத்து விளையாடும் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், நிறுவனம் எதிர்கொள்ளும் நிதி சிக்கலே இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் கேமிங் துறை கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால் சூதாட்ட தன்மை அதிகரிப்பதால், அதனால் ஏற்படும் நிதி இழப்புகள் மற்றும் சமூக பிரச்சனைகளை கட்டுப்படுத்தவே மத்திய அரசு இந்தக் கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனால், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்த ஆன்லைன் கேமிங் துறையின் எதிர்காலம் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. அதேசமயம், பணம் வைத்து விளையாடும் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்தச் சட்டம் ஓர் நிம்மதியையும் பாதுகாப்பையும் தரும் எனக் கருதப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Online Gambling Prohibition Act MPL lays off 60 percentage of employees MPL employees in shock


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->