ஓய்வு பெற்ற விஞ்ஞானியிமே டிஜிட்டல் கொள்ளை: சிபிஐ,என மிரட்டி ரூ.1.29 கோடி மோசடி: 04 பேர் கைது..!
04 people arrested for defrauding a retired scientist of crores by threatening to call CBI in Uttar Pradesh
சி.பி.ஐ., எனக்கூறி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஒருவரிடம் ரூ.1.29 கோடி மோசடி செய்த கும்பலை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். சுக்தேவ் நந்தி என்பவர் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். மர்ம கும்பல் ஒன்று இவரை தொடர்பு கொண்டு தங்களை சி.பி.ஐ., எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர், அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி, மிரட்டியுள்ளனர். அத்துடன், 03 நாட்கள் வீட்டிற்குள்ளேயே அடைத்தும் வைத்துள்ளனர். மேலும் அவரை மிரட்டி ரூ.1.29 கோடி மோசடி செய்துள்ளனர்.
இறுதியில் சுக்தேவ் நந்தி, பணத்தை இழந்தபின்புதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். அதனையடுத்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷியாம், சுதீர், ரஜ்னீஸ் மற்றும் மகேந்திரா ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த மோசடி தொடர்பில் போலீசார் அவர்களிடம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
04 people arrested for defrauding a retired scientist of crores by threatening to call CBI in Uttar Pradesh