தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு: ஆந்திராவை தொடர்ந்து, தெலுங்கானா அரசு உத்தரவு..!
Telangana government orders to increase working hours of workers to 10 hours
தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரம் வரை உயர்த்திக்கொள்ள தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் 10 மணி நேர வேலை என்ற உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தெலுங்கானா மாநில அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின் முதன்மைச் செயலாளர் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தெலங்கானா அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நாளொன்றுக்கு 08 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் ஆக அதிகரிக்கப்படுகிறது. எனினும், வாராந்திர வேலை நேரம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட படி, 48 மணி நேர வரம்பை மீறாத வகையில் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அத்துடன், குறைந்தபட்சம் 06 மணி நேர வேலை நேரத்துக்கிடையில் 30 நிமிட இடைவெளி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Telangana government orders to increase working hours of workers to 10 hours