நடுரோட்டில் தனியாக ஓடிய தலை.. திரைப்படத்தை மிஞ்சும் பரபரப்பு கொலை.. பட்டுக்கோட்டையில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை கண்டியன் தெரு பகுதியை சார்ந்தவர் சிரஞ்சீவி (வயது 35). இவருக்கு திருமணம் முடிந்து ஆண் குழந்தை உள்ள நிலையில், பட்டுக்கோட்டை அருகேயுள்ள துவரங்குறிச்சி பகுதியில் பிராய்லர் கோழிக்கடை நடத்தி வந்துள்ளார். ஐயப்பன் கோவில் செல்வதற்காக மாலை அணிவித்து விரதம் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை கோவிலுக்கு செல்ல பூஜை ஜமான்களை வாங்கிவிட்டு செல்ல பட்டுக்கோட்டை பெரியக்கடை தெருவிற்கு வந்துள்ளார்.

இதன்போது, இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், சிரஞ்சீவியை வழிமறித்து பட்டா கத்தியால் தலையை வெட்டி கொலை செய்தது. இதில், சினிமாவில் வருவது போல சிரஞ்சீவின் தலை துண்டாக விழவே, இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதன்பின்னர், இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் கொண்ட கும்பல் எந்த விதமான சலனமும் இன்றி தப்பி சென்றது. 


இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பட்டுக்கோட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சிரஞ்சீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய துவங்கியுள்ளனர்.

கொலையான சிரஞ்சீவியின் மீது பல கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அங்குள்ள பெருமாள் கோவில் தெருவை சார்ந்த கபிலனிற்கும் - சிரஞ்சீவிக்கும் இடையே யார் பெரியவர்? என்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதத்தால் கொலை நடந்ததா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur Pattukkottai Murder Police Investigation 5 Jan 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->