புதன்சந்தை: கிடைத்ததை அள்ளி வாயில் போட்டு கம்பி நீட்டிய காவிஸ்.. அதிகரிக்கும் ஓசி சோறு அட்டூழியங்கள்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதன்சந்தை பகுதியில் பார்வதி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 3 பிற உணவகங்களும் இருக்கிறது. நேற்று முன்தினம் சேலத்தில் பாஜக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தஞ்சாவூர் மாவட்ட பாஜகவினர் 100 க்கும் மேற்பட்டோர், வாகனத்தை நிறுத்தி பார்வதியின் உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு கடையில் இருந்த பலகாரங்கள் மற்றும் குளிர்பானங்கள் என ஓசியில் கிடைக்கிறது என்று எண்ணி ஓசி பொருளை வாரி அள்ளி வாயில் போட்டுள்ளனர்.

மொத்தமாக, ரூ.5 ஆயிரத்திற்கு பொருட்களை சாப்பிட்டு உடல் பசியை ஆற்றிய நிலையில், பணத்தை கொடுக்காமல் கிளம்பியுள்ளனர். இதனால் கடுமையான அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் பில் தொகையை கேட்கவே, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், பணம் வேண்டும் என்றால் தஞ்சாவூருக்கு வந்தால் தருகிறேன் என்று அவர்களின் அப்பா வீட்டு ஓட்டல் போல பதில் கூறியுள்ளனர். இதனையடுத்து, கடையின் உரிமையாளர் பார்வதி அங்குள்ள நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது போன்ற ஓசி சோறு பிரச்சனையில் திமுகவினர் பல இடங்களில் சிக்கியுள்ள நிலையில், தற்போது பாஜகவினரும் சிக்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur BJP Supporters Chilly Activity Went Salem Meeting hotel Free Foods


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->