நடுரோட்டில் தமிழக அரசின் மதுபான கடை வாடிக்கையாளர் செய்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 24) இவர் கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் கடைவீதியில் நேற்றிரவு மது அருந்திவிட்டு போதையில் சுற்றி தெரிந்தார். 

அந்த பகுதியில் திருநீலக்குடி இன்ஸ்பெக்டர் பழனிவேல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஆரோக்கியராஜ் குடிபோதையில் அவரது செல்போனில் படம் பிடித்துள்ளார். 

மேலும் பழனிவேலை நோக்கி நீங்கள் குடிபோதையில் பணி செய்கிறீர்கள் என ஆரோக்கியராஜ் போதையில் உளறி உள்ளார். 

இதனை தொடர்ந்து அவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. 

பின்னர் பழனிவேல் உதவிக்காக மேலும் 2 காவலர்களை அழைத்து வந்து ஆரோக்கியராஜ் அப்புறப்படுத்த முயன்றனர். இருப்பினும் ஆரோக்கியராஜ் 2 போலீசாரிடமும் ரோட்டில் படுத்தபடியே தகராறில் ஈடுபட்டார். 

காவல்துறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து போதையில் இருந்த ஆரோக்கியராஜை வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தி ஆட்டோவில் ஏற்றி திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thajavur drunk man argument with police


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->