முருங்கைக்காய் பறிக்க முயன்றபோது நேர்ந்த பேராபத்து...! 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் வக்கீல் துடிதுடிக்க உயிரிழப்பு...!
terrible accident occurred while trying pluck drumstick young female lawyer fell from 2nd floor and died
நெல்லை மாவட்டம் கூடங்குளம் வடக்கு அய்யா கோவில் தெருவை சேர்ந்த முருகனின் மகள் தீபிகா (23), சட்டத்துறையில் பணியாற்றி வந்தார். குடும்பத்தினரின் செல்ல மகளாக விளங்கிய அவர், இன்னும் சில நாட்களில் திருமண பந்தத்தில் இணைவதற்காக காத்திருந்த நிலையில் துயரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

நேற்று காலை வீட்டின் இரண்டாவது மாடிக்கு சென்ற தீபிகா, அருகில் இருந்த முருங்கை மரத்தில் காய்களை பறிக்கும் நோக்கில் சுவரின் ஓரத்தில் நின்று முயற்சி செய்ததாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய அவர், இரண்டாவது மாடியில் இருந்து அண்டை வீட்டின் முதல் மாடிப் பகுதியில் தவறி விழுந்தார்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தீபிகா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை காணாத பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
பின்னர் அண்டை வீட்டுப் பகுதியில் படுகாயங்களுடன் கிடந்த மகளை கண்டு கதறி அழுதனர்.உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தீபிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் துயரத்தில் மூழ்கினர்.
இந்தத் தகவலறிந்த கூடங்குளம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தீபிகாவுக்கு கடந்த வாரமே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்ததாகவும், இன்னும் 15 நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த திடீர் உயிரிழப்பு குடும்பத்தினரையும், உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மணமேடையில் அமர வேண்டிய இளம்பெண், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் கூடங்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
terrible accident occurred while trying pluck drumstick young female lawyer fell from 2nd floor and died