காலங்காலமாக மாறாத பிட்டு! மினி ஜெராக்ஸ் அடிக்கும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள்!
tenkasi govt school student mini Xerox
பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறை தேர்வு இன்று தமிழக முழுவதும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் சிலர் செய்முறை தேர்வில் காப்பியடிப்பதற்காக, பாட குறிப்புகளை மினி ஜெராக்ஸ் அடிக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகிஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சகஜமாக ஜெராக்ஸ் மிஷின்கள் புழக்கத்திற்கு வந்த காலம் முதலே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிலர், காப்பியடித்து எழுதுவதற்காக மினி ஜெராக்ஸ் காப்பி அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பொதுத் தேர்வில் மாணவர்கள் எந்த விதத்திலும் காப்பியடிப்பதை தடுப்பதற்காக பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், மினி ஜெராக்ஸ் அடிப்பதும் குறைந்தபாடு இல்லை. இந்நிலையில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர்கள் புத்தகத்தின் பக்கங்களை பெரிய பக்கத்தை சிறியதாக சுருக்கி மினி ஜெராக்ஸ் எடுத்து, அதனை மறைத்து எடுத்து தேர்வுக்கு தயாராகும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. (சிறார்களின் முகம் வெளியிடுவதை தவிர்க்க வீடியோ இணைக்கப்படவில்லை).
இந்த காணொளி கட்சியை பார்க்கும் சமூக தளவாசிகள், காப்பியடித்து எழுதுவதற்கு எடுக்கும் கடுமையான இந்த முயற்சிக்கு பதில், மாணவர்கள் படித்துவிட்டு தேர்வு எழுதலாம் என்கின்றனர்.
(சரி நீங்கள் இப்படி ஏதாவது முயற்சி செய்து மாட்டி இருக்கிறீர்களா?)
English Summary
tenkasi govt school student mini Xerox