இந்தியா வர மறுப்பு; தொடரிலிருந்தே நீக்கம்! - பாதுகாப்பு காரணங்களை முன்வைத்த வங்கதேசத்திற்கு கதவை மூடிய ஐசிசி
Refusal travel India removed from tournament ICC shut door Bangladesh who cited security reasons
இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டுத் தயாரிப்பில் வருகிற 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடர், தற்போதே அரசியல் மற்றும் ராஜதந்திர மோதல்களால் அதிரத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி இந்தியாவில் விளையாட வங்கதேசம் பிடிவாதமாக மறுப்புத் தெரிவித்ததோடு, தனது லீக் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்றக் கோரியது. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இந்த கோரிக்கையை நிராகரித்ததால், அதிரடி முடிவாக வங்கதேசம் இந்த உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே விலகியுள்ளது.

வங்கதேசத்தின் இந்த முடிவுக்குப் பாகிஸ்தான் தனது ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளது. மொத்தத் தொடரையும் புறக்கணிப்பதா அல்லது இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தை மட்டும் தவிர்ப்பதா என்பது குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில், தொடரை நடத்தும் மற்றொரு நாடான இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.இது குறித்துப் பேசிய இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலாளர் பண்டுலா திசநாயகே, "இந்த விவகாரம் இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையிலான பிராந்தியப் பிரச்சினை; இதில் இலங்கை தலையிட்டு எந்தவொரு மோதலிலும் சிக்க விரும்பவில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அண்டை நாடுகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்கும் இலங்கை, தொடர்ந்து நடுநிலை வகிக்கும் என்றும், ஒருவேளை போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசி கோரினால் அதை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் இலங்கையில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.டி20 உலகக் கோப்பை 2026 -
போர்க்கொடி தூக்கிய வங்கதேசம்: பாதுகாப்பைக் காரணம் காட்டி தொடரிலிருந்து விலகல்.பாகிஸ்தானின் மர்மம்: ஆலோசனையில் இருக்கும் PCB; இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இலங்கையின் சாதுர்யம்: நட்பு நாடுகளின் மோதலில் தலையிடாமல் நடுநிலை வகிப்பதாக அறிவிப்பு.ஹைலைட் மேட்ச்: இந்தியா - பாகிஸ்தான் மோதல் இலங்கையில் அரங்கேறுகிறது.
English Summary
Refusal travel India removed from tournament ICC shut door Bangladesh who cited security reasons