சென்னையின் புதுவரவு.. "ஏடிஎம் போல் டாஸ்மாக் சரக்கு இயந்திரம்".. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
Tasmac liquor machine like ATM in Chennai
தமிழ்நாடு முழுவதும் மது விற்பனை தமிழ்நாடு மாநில வாணிப கழகம் எனும் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக முழுவதும் அரசு சார்பில் 5,329 சில்லரை விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு 2022-2023 நிதியாண்டில் டாஸ்மாக் விற்பனை மூலம் ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசின் வருவாய் 50,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசால் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் வினியோகிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பலதரப்பட்ட மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த அரசாணையிலிருந்து திருமண மண்டபங்கள் மட்டும் நீக்கப்பட்டு மீண்டும் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக சமூக நீதிப் பேரவை தலைவரும் பாமக வழக்கறிஞருமான க.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் தானியங்கி மது விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பிராந்தி, விஸ்கி, ரம், பீர் வகைகள் வினியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Tasmac liquor machine like ATM in Chennai