டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து - தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.!
tanker lory and bus fire accident in chennai
டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து - தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி புறப்பட்டு வந்தது. இந்த பேருந்து இன்று காலை 5.30 மணியளவில் சென்னை வேலப்பன்சாவடி சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, பேருந்து கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் லாரி வெடித்ததால் லாரியும், பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது.

இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து உடனே காவலதுறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் 22 பேர் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து 22 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதன் பின்னர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த லாரி மற்றும் பேருந்தை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து மற்றும் லாரி முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின.
English Summary
tanker lory and bus fire accident in chennai