தென் தமிழகத்திற்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலெர்ட்!
tamilnadu weather report rain alert 16 10 2025
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களில் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்றைய தினமான அக்டோபர் 16-ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தேனி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன், சென்னை, சேலம், திருச்சி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை அக்டோபர் 17-ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மீண்டும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை தொடரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனிடையே வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள பாதிப்பு மற்றும் மின்சார கோளாறுகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
tamilnadu weather report rain alert 16 10 2025