கோடை விடுமுறை நிறைவு.. தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.!
Tamilnadu schools open today
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 7ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் வரும் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நீண்ட நாள் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளி திறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பள்ளிகளில் இன்றைய தினமே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu schools open today