6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!
tamilnadu rain update
தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.