தனியார் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மருத்துவத் துறைச் செயலாளர் செந்தில்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக முதல் முறையாக கல்விக் கட்டணங்களை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு பெற்று வருகிறது. 

இதையடுத்து, முதுகலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்துள்ளது. இந்தக் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அது தொடர்பான புகார்களை இளநிலை மாணவர்கள் ddugselcom@gmail.com, முதுநிலை மாணவர்கள் ddpgselcom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விவரங்கள் tnmedicalselection.net என்ற இணையத முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்"  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu government order to private medical colleges


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->