மீண்டும் அராஜகம்! ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!
Tamilnadu fisherman arrest Srilankan Navy
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இம்மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ததோடு, பயன்படுத்திய ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் தமிழக மீனவர்கள் கைது சம்பவங்கள் அதிகரித்து வருவதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இரு நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamilnadu fisherman arrest Srilankan Navy