நடிகைகளாக நாங்கள்...கொஞ்சம் பச்சாதாபத்தை மட்டுமே எதிர்பார்க்கிறோம்...! - ராதிகா ஆப்தே
actresses we only expect a little empathy Radhika Apte
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான 'ராதிகா ஆப்தே', தமிழில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தின் மூலம் அறிமுகமாகினார்.அதைத் தொடர்ந்து 'கபாலி', 'வெற்றிச்செல்வன்', 'சித்திரம் பேசுதடி-2', 'மெர்ரி கிறிஸ்துமஸ்' போன்ற சிறந்த படங்களில் நடித்துள்ளார்.

இவர் இங்கிலாந்தை சேர்ந்த வயலின் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார். இருவருக்கும் கடந்த ஆண்டில் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் பாலிவுட் சினிமா குறித்த பரபரப்பு கருத்துகளை ராதிகா தற்போது மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
ராதிகா:
அவர் தெரிவிக்கையில், ''நான் கர்ப்பமாக இருந்த சமயம், ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். நான் கர்ப்பவதி என்று தெரிந்தும், இறுக்கமான ஆடைகளை அணியச்சொல்லி முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் கட்டாயப்படுத்தினார். நானும் வேறு வழியின்றி நடித்தேன்.என்னை போல பலருக்கும் இது நடந்துள்ளது.
நாங்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கவில்லை. கொஞ்சம் பச்சாதாபத்தை மட்டுமே எதிர்பார்க்கிறோம். பாலிவுட் சினிமாவில் அரங்கேறும் இந்த கொடுமையான போக்கு மாறவேண்டும்''என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது ரசிகர்களுக்கு SHOCK கொடுத்து வருகிறது.
English Summary
actresses we only expect a little empathy Radhika Apte