பாஜக நிர்வாகி வழக்கில் திருப்பம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
BJP CPS case Chennai HC order
பாஜக ஸ்டார்ட்அப் விங் மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், சேலம் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம், ஏற்காட்டில் நிலத் தகராறு தொடர்பாக, அக்கம் பக்கத்து எஸ்டேட் காவலாளி வெள்ளையனை சிபி சக்கரவர்த்தி மற்றும் மூவர் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், சக்கரவர்த்தி ஜாதிப்பெயரை கூறி திட்டியதாகவும் வெள்ளையன் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏற்காடு போலீசார், சக்கரவர்த்தி, அவரது தந்தை மணவாளன் மற்றும் மனைவி சித்ரா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரிக்கையை தடுக்கும் நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக கூறி, சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
விசாரணை மேற்கொண்ட நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோரினால், புகார்தாரரின் ஆட்சேபங்களை கேட்ட பின் மட்டுமே ஜாமீன் மனுவில் தீர்மானிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
English Summary
BJP CPS case Chennai HC order