மிரட்டும் வகையில் பேசிய திமுக அமைச்சருக்கு சென்னை பிரஸ் கிளப் கண்டனம்!
DMK Sekar babu Chennai Press club
சென்னை பிரஸ் கிளப் விடுத்துள்ள கண்டன செய்தியில், "தூய்மைப் பணியார்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய Neelam Culture சேர்ந்தவரை மிரட்டும் வகையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு அவர்களின் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.
பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஓருவாரத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்த செய்திகளை பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்கிளில் பதிவிட்டு வருகின்றனர்.
நேற்று இரவு, போராடும் தொழிலாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது நீலம் பண்பாட்டு மையத்தை சேர்ந்தவரை நோக்கி அமைச்சர் சேகர்பாபு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், தவறான முன்உதாரணத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
ஆகவே, அமைச்சர் சேகர்பாபுவின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிப்பதுடன் இனி இதுபோல் நடந்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
DMK Sekar babu Chennai Press club