வித்தியாசமான கதைக்களத்தில் இறங்கிய நானி... 'The Paradise'படத்தின் first look...!
Nani enters different storyline First look The Paradise
கடந்த 2023ம் ஆண்டு, Natural star நானி, நடிகை கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளிவந்த படம் ''தசரா''.இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நானி மீண்டும் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" ( the PARADISE ) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அனிருத் இசையமைக்க, இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. மேலும், தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாப்பாத்திரத்திற்கு ''ஜடல்'' என பெயர் வைத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு, படக்குழு இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்,மிகப்பெரிய அளவில் வைரலானதைத் தொடர்ந்து, நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் 'பேரடைஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அந்த போஸ்டரில் நானி இரட்டை ஜடை போன்று வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இருக்க, அவருக்கு பின் ஏராளமான ஆயுதங்கள் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாக இருக்கிறது.
English Summary
Nani enters different storyline First look The Paradise