Gossips- கு full stop...! சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ''சிம்பு'' மற்றும் பிரபல இயக்குனர் ''வெற்றிமாறன்'' கூட்டணியில் புதிய படம் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டது.இந்த புதிய படமானது வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் 'கேங்ஸ்டர்' கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகியது.

மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.இதன் முதற்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் கைவிடப்பட்டுள்ளதோ? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்தது.

இதனை நடுவே,'சம்பள விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிம்பு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது".

தற்பொழுது இந்த சலசலப்புக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தொடங்கியது! மற்றவர்களின் அலறலைத் தாண்டி தொடரும். சிங்கத்தின் ஆட்டம் விரைவில்." என்று பதிவிட்டுள்ளார். இது சிம்பு ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gossips full stop producer gave update that lions game released soon


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->