இணையத்தில் வைரலாகி வருகிறது புல்லட் படத்தின் டீசர்.!
bullet movie teaser released
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் 'புல்லட்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மட்டும் இல்லாமல் அவரின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் காட்சியில் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களுக்கு ஏற்கனவே வேறொரு நபருடைய வாழ்வில் தொடர்பு உள்ளது போல் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை ராகவா லாரன்ஸின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றனர். பயங்கர எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
English Summary
bullet movie teaser released