திருநெல்வேலியில் அதிரடி தரிசனம்! அதிகாலையே நெல்லையப்பரை வந்தடைந்த நடிகர் தனுஷ்!
Action packed darshan Tirunelveli Actor Dhanush arrived Nellaiapparai early morning
சில கால இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து வெற்றி கொடி நாட்டிய நடிகர் தனுஷ், தற்போது இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் ஆக்ஷன்–த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.

‘தனுஷ் 54’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை படப்பிடிப்பு இடைவெளியில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு தனுஷ் ரகசியமாக வந்தார். பின்னர் நெல்லையப்பர் கோவிலில் தரிசனம் செய்ய அவர் நேரில் சென்று வழிபாடு செய்தார்.
அவருடன் இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் படக்குழுவினரும் இணைந்து, நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனை செய்தது கோவில் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களிடையே சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Action packed darshan Tirunelveli Actor Dhanush arrived Nellaiapparai early morning