நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் சாந்தினிக்கு கோலாகல நிச்சயதார்த்தம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
Actress Saranya Ponvannan daughter Chandini gets engaged in a lavish ceremony do you know who the groom is
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அம்மா கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன் குடும்பத்தில் இன்ப நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அவரது இரண்டாவது மகள் சாந்தினி நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1987ஆம் ஆண்டு கமல்ஹாசனுடன் ‘நாயகன்’ படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா, மனசுக்குள் மத்தாப்பூ, கருத்த்தம்மா, மீண்டும், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல படங்களில் சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் அம்மாவாக வேடங்களில் நடித்து, எல்லோருக்கும் பிடித்தமான நடிகையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1995ல் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்ட சரண்யா – பொன்வண்ணன் தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் – பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி. குழந்தைகளை வளர்ப்பதற்காக சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்த சரண்யா, பின்னர் மீண்டும் வெற்றிகரமாக திரும்பி பல முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் இருந்தும், தனது மகள்களை மருத்துவ துறையில் நிலைநிறுத்தியுள்ளார் சரண்யா.மூத்த மகள் பிரியதர்ஷினி – குழந்தைகள் நல மருத்துவர்..இளைய மகள் சாந்தினி – மகப்பேறு மருத்துவர்
சமீபத்தில் பிரியதர்ஷினியின் MD Pediatrics பட்டமளிப்பு விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, தற்போது சாந்தினியின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. சாந்தினி தனது இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்ததும், திரையுலகத்தினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தாராளமாக வழங்கி வருகிறார்கள்.
சரண்யா குடும்பத்தில் நடந்த இந்த இனிய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
English Summary
Actress Saranya Ponvannan daughter Chandini gets engaged in a lavish ceremony do you know who the groom is