தென்னிந்தியாவுக்கு ₹4,000 கோடி முதலீடு – OTT உலகில் புரட்சியை அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!கமல்ஹாசன் மாஸ் ஆதரவு!
4000 crore investment in South India JioHotstar announces revolution in the OTT world Kamal Haasan gets mass support
இந்தியா முழுவதும் தனது பிரீமியம் OTT தளத்தை மறுசீரமைத்து பத்து மாதங்களை நிறைவு செய்துள்ள ஜியோஹாட்ஸ்டார், தென்னிந்தியாவில் மிகப்பெரிய உள்ளடக்க விரிவாக்கத்தை தொடங்க இருப்பதாக சென்னையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அறிவித்தது. தென்னிந்தியாவுக்கே தனியாக ₹4,000 கோடி முதலீடு செய்யப்படுவதாகவும், இது நீண்டகால துறைத்திட்டத்தின் ஆரம்பம் மட்டுமே என்றும் நிறுவனம் தெரிவித்தது.
மேலும் டிவி + டிஜிட்டல் சேர்த்து தெற்குக்கென ஒதுக்கப்பட்டுள்ள மொத்த முதலீட்டு தொகை ₹12,000 கோடி என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அறிவித்தார். இது வரவிருக்கும் ஆண்டுகளில் தென்னிந்தியா OTT உள்ளடக்கத்தில் ஏற்படும் புரட்சிக்கான முக்கிய அடித்தளமாகக் கருதப்படுகிறது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் பேசுகையில்,“இன்று பார்வையாளர்கள் எங்கு சென்றாலும் திரைகள் அவர்களைப் பின்தொடர்கின்றன. பிராந்தியம் தேசியமாகிறது; தேசியம் சர்வதேசமாகிறது. தென்னிந்தியாவின் கதைகள் இனி உலகத்திற்கு பேசப்படுகின்றன. காந்தாரா, பகுபலி, புஷ்பா, விக்ரம், அமரன் போன்ற படங்கள் இதற்கு உதாரணம்,” என்று கூறி, உள்ளடக்க உருவாக்கத்தை மேம்படுத்த ஜியோஹாட்ஸ்டாரின் முடிவு பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், நாகார்ஜுனா, மோகன்லால், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவை விஜய்டிவியின் கோவிநாத் மற்றும் பிரியங்கா இணைந்து நடத்தினர்.
ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ள இந்த மிகப்பெரிய முதலீடு, தென்னிந்திய மொழிக் கதைகளை தேசியம் தாண்டி உலகளவில் கொண்டு செல்லும் புதிய காலத்தை ஆரம்பிக்கவிருக்கிறது.
English Summary
4000 crore investment in South India JioHotstar announces revolution in the OTT world Kamal Haasan gets mass support