போரால் பலன் இல்லை... இழப்பே அதிகம்...! - மேற்காசிய பதற்றத்திற்கு சீனா கருத்து...! - Seithipunal
Seithipunal


ஈரானை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய வான்வழித் தாக்குதல், தற்போது மேற்காசிய முழுவதையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து 6 வாரங்களாக நீடித்து வரும் இந்த தாக்குதல்களில், ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.இந்த போராட்ட சூழ்நிலை காரணமாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், வளைகுடா நாடுகளும் தீவிர விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றன.

உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் கருத்து தெரிவிக்கையில், “இந்த நெருக்கடியான சூழலில் அனைத்து தரப்பினரும் பதற்றத்தை குறைக்கும் வகையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

உடனடியாக அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வருவது தான் தீர்வாக இருக்கும்” என தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்றிரவு 8 மணி வரை கடும் காலக்கெடு விதித்துள்ளார்.

அந்தக் காலக்கெடு முடியும் முன் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஈரானின் மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய பாலங்கள் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களின் நோக்கம், அந்த முக்கிய கட்டமைப்புகளை முழுமையாக சேதப்படுத்தி, அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் அழிப்பதே எனவும் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். மேலும், “ஈரானில் மின்சார வசதிகளும், முக்கிய பாலங்களும் எதுவும் மீதமிருக்காது; நாடு கற்கால நிலைக்கு தள்ளப்படும்” என அவர் கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

War has no benefits it has many losses China opinion on West Asian tensions


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->