ஆரோக்கியம் முக்கியம்… ஆனால் முன்னுரிமை இல்லை...! - 42.5% இந்தியர்கள் கூறும் கவலைக்கிடமான உண்மை...!
Health important but not priority disturbing truth that 42point5 Indians say
உலக சுகாதார தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்தியர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கிய பழக்கங்களை வெளிச்சமிடும் வகையில் புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. மெட்ரோ நகரங்கள் மற்றும் அடுத்த கட்ட நகரங்களை உள்ளடக்கி, சுமார் 5 ஆயிரம் நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பல சிந்திக்க வைக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 90 சதவீதம் பெண்கள்; அவர்கள் பெரும்பாலும் 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள். ஆய்வின் முடிவுகள் காட்டுவதாவது, இந்தியர்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் வீட்டு வேலைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து, உடல்நலம் தொடர்பான அத்தியாவசிய அம்சங்களை பின்தள்ளி வருகின்றனர் என்பதே.சாதாரணமாக கருதப்படும் வீட்டு வேலைகளில் முழுமையாக மூழ்கி, உடற்பயிற்சி, போதிய தூக்கம் போன்ற முக்கிய ஆரோக்கிய பழக்கங்களுக்கு உரிய கவனம் வழங்கப்படாமல் போகிறது.
குறிப்பாக தூக்கத்தை குறைப்பது போன்ற சமரசங்கள், உடல்நலத்திற்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன.மேலும், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் செயல்பாடு ஆகியவற்றுக்கிடையில் பெரிய இடைவெளி இருப்பதும், அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் கவலைக்கிடமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக, தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்க முடியவில்லை என்று 42.5 சதவீத இந்தியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதே சமயம், 57.8 சதவீதம் பேர் “எது நமக்கு நல்லது என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அதை தொடர்ந்து பின்பற்ற முடியாமல் தவறிவிடுகிறோம்” என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 46 சதவீதம் பேர் உடல்நலத்தை மேம்படுத்த முயற்சிப்பதாக கூறினாலும், அதனை நீடித்த பழக்கமாக மாற்றுவதில் சிரமம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், இந்தியர்களுக்கு விழிப்புணர்வு குறைபாடு இல்லையெனவும், ஆனால் தினசரி வாழ்க்கையில் ஆரோக்கியமான பழக்கங்களை நிலைத்ததாக மாற்றுவது தான் பெரிய சவாலாக உள்ளது என அந்த ஆய்வு தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Health important but not priority disturbing truth that 42point5 Indians say