தேர்தல் முடியும் வரை 'TN 2026'படத்தை தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!
Petition filed in the High Court seeking a ban on the film TN 2026 until the elections are concluded
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரை, TN 2026 படம் வெளியிடப்படுவதை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நட்ராஜ் (நட்டி) நடிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் TN 2026. இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், ஏப்ரல் 10-ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை, தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டுமென, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர், வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது; தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், TN 2026 படத்தை வெளியிட அனுமதித்தால், அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், நியாயமான தேர்தலையும் பாதிக்கும் என்பதால், தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரை படம் வெளியிடப்படுவதை நிறுத்தி வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கை ஏப்ரல் 06-ஆம் தேதி அளித்த மனுவை, தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Petition filed in the High Court seeking a ban on the film TN 2026 until the elections are concluded