வெற்றிமாறன்- சிம்பு கூட்டணியில் 'அரசன்' படத்தில் இணைந்த கென் கருணாஸ்..! - Seithipunal
Seithipunal


வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் கென் கருணாஸ் இணைந்துள்ளார். தற்போது அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

'விடுதலை 2' படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் நடிகர்  சிம்பு நடிக்கும் படம் 'அரசன்'. இந்த படத்தை 'கலைப்புலி' தாணு தயாரிக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வட சென்னையை பின்னணியாக கொண்டு கேங்க்ஸ்டர் படமாக இந்தப் படம் உருவாகி வரும் இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

அத்துடன், அமீர், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. 

வரும் ஜூன் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது. இந்தப் படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தில் கென் கருணாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ken Karunas joins the Vetrimaaran and Simbu collaboration for the film Arasan


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->