ரஜினிகாந்தின் career-ல் ப்ளாக்பஸ்டர் வசூல் செய்த Top படங்கள் – பட்டியல் இதோ!
Top blockbuster films in Rajinikanth career here is the list
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நீண்ட சினிமா பயணத்தில் பல ப்ளாக்பஸ்டர் படங்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். காலத்தைக் கடந்து பேசப்படும் அந்த வெற்றி படங்களில் சிலவற்றின் வசூல் விவரங்கள் இதோ…
2019ஆம் ஆண்டு வெளியான ‘பேட்ட’, ரூ.135 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.223 கோடி வசூல் செய்து ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில் சிம்ரன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
2024ல் வெளியாகிய ‘வேட்டையன்’ ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.255 கோடி வசூல் செய்தது. த.செ. ஞானவேல் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவான இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்தார்.
ரஜினியின் மிக முக்கியமான ஹிட்களில் ஒன்று ‘எந்திரன்’ (2010). ரூ.130 கோடி செலவில் உருவான இந்த பெரும்படம் ரூ.290 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஷங்கர் – சன் பிக்சர்ஸ் கூட்டணியில் வந்த இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்தார்.
2016ல் வெளியான ‘கபாலி’ கூட ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.295 கோடி வசூலித்து, உலகளாவிய வெற்றியை பெற்றது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இப்படம் பாணியுடனும், கதையுடனும் ரசிகர்களை கவர்ந்தது.
ரஜினிகாந்தின் மிக பிரம்மாண்டமான படங்களில் ஒன்று ‘கூலி’ (2025). ரூ.350–400 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.517–518 கோடி வசூல் செய்த இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சோபின் ஷாஹிர் போன்ற பல பான்-இந்தியா நட்சத்திரங்கள் இதில் நடித்தனர்.
2023ல் வெளியான ‘ஜெயிலர்’ ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.605 கோடி வசூல் செய்து சமீப காலத்தில் ரஜினியின் மிகப்பெரிய வெற்றியாக திகழ்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
ரஜினியின் career ல் அதிக வசூல் செய்த படம் ‘2.0’ (2018). ரூ.540 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.675 கோடி வரை வசூல் செய்து இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஹிட்களில் ஒன்றாக திகழ்கிறது. ஷங்கர் இயக்கிய இப்படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக மெருகூட்ட, எமி ஜாக்சன் நாயகியாக நடித்தார்.
ரஜினிகாந்தின் ஒவ்வொரு படமும் ஒரு நிகழ்வாக மாறும் நிலையில், அவரின் ப்ளாக்பஸ்டர் பட்டியல் இன்னும் நீளுமா என்பது ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
Top blockbuster films in Rajinikanth career here is the list