பெரும் துயரம்! கேரளாவில் பலியான தமிழக மாணவர்கள்!
kerala Coimbatore college students death
கேரளாவின் சித்தூர் ஆற்றில் நடந்த துயரச்சம்பவம் இரு கல்லூரி மாணவர்களின் உயிரை பறித்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த அருண்குமார் மற்றும் ஸ்ரீ கவுதமன், நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இருவரும் திடீரென நீரின் பலத்த சுழற்சியில் சிக்கினர். அந்த சுழற்சியிலிருந்து தப்பிக்க முடியாமல், சில நொடிகளில் ஆழத்தில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும், நீரின் வேகத்தால் அவர்கள் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இருவரின் மூழ்கும் தருணங்கள் அருகில் இருந்த ஒருவரின் மொபைல் கேமராவில் பதிவாகி, பின்னர் இணையத்தில் பரவியது.
உடனடியாக தகவல் அறிந்த மீட்புப்படை சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் நடத்தி, இருவரின் உடல்களையும் மீட்டது. பின்னர் அவை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
English Summary
kerala Coimbatore college students death