ஓடும் ரயிலில் பெண்ணை தாக்கி, கீழே தள்ளிவிட்டு கொள்ளை! பெரும் அதிர்ச்சி சம்பவம்!
kerala train robbery woman harras
கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பன்வேலிலிருந்து திருச்சூர் நோக்கி சென்ற சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், 64 வயது பெண் ஒருவர் தனது சகோதரருடன் பயணம் செய்துகொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் ரயில் கோழிக்கோடு நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, அந்த பெண் கதவின் அருகே நின்றிருந்தார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென வந்து அவரிடம் இருந்த பையை பறிக்க முயன்றார். அவர் எதிர்த்ததால், அந்த நபர் பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி, பின்னர் குதித்து, ரூ.8,000க்கும் மேற்பட்ட பணமும் மொபைல் போனும் பறித்துக் கொண்டு தப்பினார்.
மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்ததால், பெண்ணின் தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது.
உடனே பயணிகள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். காயமடைந்த பெண் முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கும் பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கும் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர், அந்த பெண், “அவர் திடீரென பையைப் பறிக்க வந்தார். நான் விடாததால் என்னை தள்ளி தண்டவாளத்தில் விழ வைத்தார். நான் மிகவும் பயந்தேன்” என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தப்பியோடிய மர்ம நபரை அடையாளம் காண ரயில்வே போலீஸார் விசாரணைக்குழுவை அமைத்துள்ளனர்.
English Summary
kerala train robbery woman harras