தமிழகத்தில் இன்று முதல் "அகல் விளக்கு" திட்டம் அமல்! தொடங்கிவைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
School Education Minister Anbil Mahesh Poyyamozhi inaugurated Akal Vilakku scheme
இன்று புதுக்கோட்டையில் அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ‘‘9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எவ்வித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர வேண்டும்.
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் வரும் சிக்கல்களில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இணையதளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ‘அகல்விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படும்’’ என 2024-25 பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தோம்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகல்விளக்கு திட்டத்தை இன்று தொடங்கிவைத்தோம். அமைச்சர்கள் ரகுபாதி, பெய்யநாதன் ஆகியோர் வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டு மாணவிகளுக்கு வழங்கினர்.
பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா?’ அது போன்றதே ஆண்களால், பெண்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதும்!” என்ற தந்தை பெரியாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, மாணவிகள் நம்பிக்கையோடும் கல்வியைத் துணை கொண்டும் விடுதலைப் பெற வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். விழிப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
School Education Minister Anbil Mahesh Poyyamozhi inaugurated Akal Vilakku scheme