திமுகவிடமிருந்து ஒரு பொதுத் தொகுதியை பெற திருமாவளவன்.... சீமான் பரபரப்பு பேட்டி!
VCK Thirumavalavan condemn to DMK VCK Thirumavalavan
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக அரசின் ஆட்சி நடைமுறையை விமர்சித்தார். தமிழ்நாட்டில் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும், அதை திராவிட மாடல் எனச் சொல்லும் உரிமை திமுகவுக்கு இல்லை என்றும், ‘திராவிடம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல, சமஸ்கிருதச் சொல் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிராமண எதிர்ப்பை காட்டி திராவிடத்தை முன்னிறுத்திய திமுக, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான உரிமைகள் வழங்குவதில் பின்தங்கியுள்ளதாக சீமான் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் தலித் சமூகத்தினரை பொதுத்தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்து காட்டியவர் எனவும், அதேபோல் தலித் சமூகத்தினரை சபாநாயகரும், அமைச்சருமாக நியமித்தார் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற மாற்றத்தை திமுக செய்யத் தவறியதாக குற்றம்சாட்டினார்.
மேலும், திருமாவளவன், திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை பெற பாடுபடுவது குறித்து சீமான் கேள்வி எழுப்பினார். பொதுக்குளத்தில் குளிக்க அனுமதியில்லாதபோல், பொதுத்தொகுதியில் போட்டியிடவும் அனுமதியில்லையென திமுக வலியுறுத்திய சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆரியம், திராவிடம், தேசிய மற்றும் மாநிலக் கல்விக்கொள்கைகள் அனைத்தும் பெயர்பெயராகவே வேறுபட்டாலும், உள்ளடக்கம் ஒன்றே எனவும் அவர் தெரிவித்தார்.
English Summary
VCK Thirumavalavan condemn to DMK VCK Thirumavalavan