மோந்தா புயல் எச்சரிக்கை: நாளை சென்னை உள்ளிட்ட 03 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
Schools to remain closed in 3 districts including Chennai tomorrow due to heavy rains
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்ததாழ்வு மண்டலம், புயலாக (மோந்தா) வலுப்பெற்றுள்ளது. இது சென்னையில் இருந்து தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக உருவெடுத்து நாளை ( அக்டாபர் 28) ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூரிலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளதோடு, ராணிப்பேட்டையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Schools to remain closed in 3 districts including Chennai tomorrow due to heavy rains