மகளிர் உலகக் கோப்பை: பிரதிகா பிரதிகா விலகியுள்ள நிலையில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்..!
New problem for the Indian team with Pratika out of the ICC Womens World Cup
பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) கொண்ட 13வது கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதன் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா (13 புள்ளி), இங்கிலாந்து (11), தென் ஆப்ரிக்கா (10), இந்தியா (07) அணிகள் முன்னேறியுள்ளன. அரையிறுதியி போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் வரும் (அக்டோபர் 29), இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் (அக்டோபர் 30) மோதுகின்றன.
சமீபத்தில் நவி மும்பையில் நடந்த இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இப்போட்டியில் 'பீல்டிங்' செய்த போது, இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் கீழே விழுந்தத்தில் அவரது வலது முழங்கால், கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இவரை, சக வீராங்கனைகள், உதவியாளர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.

தற்போது பிரதிகாவின் காயத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளதால் உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.இவர் லீக் சுற்றில் விளையாடிய 06 இன்னிங்சில், ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 308 ரன் (சராசரி 51.33, 'ஸ்டிரைக் ரேட்' 77.77) குவித்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து நல்ல தொடக்கம் கொடுக்க கூடியவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இவர் விளையாட முடியாதது, இந்திய அணிக்கு பின்னடைவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரையிறுதியில் அமன்ஜோத் கவுர் அல்லது ஹர்லீன் தியோல் தொடக்க வீராங்கனையாக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அணியில் பிரதிகாவுக்கு மாற்று வீராங்கனையாக ஷைபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், ''அரையிறுதியில் பிரதிகா பங்கேற்க முடியாத நிலையில், ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து ஹர்லீன் தியோல் தொடக்கம் தரலாம்,'' என்று கூறியுள்ளார். பிரதிகா விலகல் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
New problem for the Indian team with Pratika out of the ICC Womens World Cup