'கட்சியின் மேலிடம் தீர்மானித்தால் 05 ஆண்டுகளும் நானே முதல்வராக தொடர்வேன்': சித்தராமையா..!
Siddaramaiah says he will continue as Chief Minister for 5 years if the party high command decides
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2½ ஆண்டுகள் ஆகிறது. ஆனால், தேர்தல் வாக்குறுதியின் படி, 30 மாதங்களுக்கு பிறகு சித்தராமையா முதலமைச்சர் பதவியை துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அம்மாநிலதின் தற்போதைய முதலமைச்சர் சித்தராமையா நேற்று மங்களூருவுக்கு சென்றார். அப்போது அங்கு அவரிடம், நிருபர்கள், நீங்களே 05 ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் 'கட்சி மேலிடம் தீர்மானித்தால் 05 ஆண்டுகளும் நானே முதலமைச்சராக இருப்பேன்' என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பும் நானே 05 ஆண்டுகளுக்கும் முதலமைச்சராக இருப்பேன் என சித்தராமையா கூறிவந்த நிலையில், முதன்முறையாக அவர், கட்சி மேலிடம் தீர்மானித்தால் 05 ஆண்டுகளுக்கும் நானே முதலமைச்சராக இருப்பேன் என கூறியுள்ளமை கர்நாடக அரசியலில் பேசும் பொருள் ஆகியுள்ளது.
English Summary
Siddaramaiah says he will continue as Chief Minister for 5 years if the party high command decides